எமது சேவைகள்
பஞ்சபக்ஷி சாஸ்திரத்தின் அடிப்படை புராண தமிழ் இலக்கியங்களாகும். பஞ்சா என்றால் ஐந்து என்றும் பக்ஷி என்றால் பறவை என்றும் அர்த்தமாகும். பஞ்சபக்ஷி சித்தாந்தத்திற்கு ஜோதிடத்தில் பஞ்சபூத சித்தாந் தொடர்பு உண்டுஎன்று கூறலாம்.
பஞ்சபூதங்களுக்குப் பதிலாக மனிதனுடைய எல்லா செயல்களையும் செய்ய வைப்பதும். கட்டுப்படுத்துவதும் ஐந்து பறவைகளாகும் என நம்பப்படுகிறது. இந்த ஐந்து விதமான சக்திகள் பகலிலும் இரவிலும் மாறி மாறி செயல்களை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் முதலில் உதிக்கின்ற சக்தியும் பின்னர் வருகின்ற கிரமமும் வாரத்தையும் பக்ஷத்தையும் சார்ந்துள்ளது.
பஞ்சபக்ஷ்சி சாஸ்திரம்
ஜென்ம நட்சத்திரத்தையும் பிறந்த நேரத்தின் பக்ஷித்தையும் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொருவருக்கும் பஞ்சபக்ஷிகளிலொன்றை முக்கியபக்ஷியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சமயமும் அவரவர்களுடைய முக்கிய பக்ஷி செய்கிற கிரியையும் பக்ஷிகளிடையேயுள்ள சத்துரு மித்ருவையும் கருத்தில் கொண்டு குணதோஷங்கள் யூகிக்கவும். பஞ்சபக்ஷிகள் வல்லூறு ஆந்தை, காகம், கோழி, மயில் முதலியவையாகும். ஐந்து செயல்பாடுகளில் ஏதாவதொன்றில் ஈடுபட்டிருக்கும். ஆட்சி ஊண் நடை துயில் சரவு.
SAMPLE FILES